நாங்கள் சிங்களவர்களுக்கோ பௌத்தர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சீற்றம்(Video)
நாங்கள் பௌத்த மதத்திற்கோ, சிங்கள மக்களுக்கோ எதிரானவர்கள் கிடையாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (29.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன அழிப்பு இடம்பெற்று வந்த காலத்தில் கூட நாங்கள் சிங்கள மக்களின் சொத்துக்களையோ, உடைமைகளையோ அழிக்க நினைத்தது கிடையாது. சமீபத்திய போராட்டங்கள் என்னையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் அச்சுறுத்துவதாகவுள்ளது.
சிங்களவர்களுக்கு எதிராக செயற்படவில்லை
உதய கம்பன்பிலவின் கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் . தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோமே தவிர வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் கால் பதிக்க கூடாது என சிங்களவர்களுக்கு எதிராக செயற்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




