கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மனித உரிமைகள் ஆணைக்குழு

Jaffna Gajendrakumar Ponnambalam S. Sritharan Sri Lanka Politician
By Kajinthan Jun 03, 2023 12:09 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொலைபேசி மூலமாக நேற்றையதினம் (03.06.2023) முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் வெளிப்பாடு

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மனித உரிமைகள் ஆணைக்குழு | Gajendrakumar Ponnambalam Issue Politician Opinion

இந்த நாட்டின் தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்தி-யது

சிறீதரனின் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே சுட்டிக்காட்டுகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மனித உரிமைகள் ஆணைக்குழு | Gajendrakumar Ponnambalam Issue Politician Opinion

இதற்கு வன்மையான கண்டனங்களையும் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தனின் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிஸார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மனித உரிமைகள் ஆணைக்குழு | Gajendrakumar Ponnambalam Issue Politician Opinion

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிவில் உடையில் நின்ற பொலிசார் தாக்குதல் நடத்தியதுடன், அநாகரிகமான வார்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன், துப்பாக்கியையும் நீட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சிறப்புரிமைகளை மீறி,பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக நடத்தும் அரசியல் உரிமை போராட்டத்தின் நியாயத்தை மீளவும் ஒருமுறை உறுதி செய்துள்ளது இந்த சம்பவம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையும், மறுவளமாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசியலமைப்பு வழங்கிய சிறப்புரிமைகளை மீறி சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களே கொலை மிரட்டல் விடுவதும், அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பதும் இலங்கைத்தீவின் இன ஒடுக்குமுறைக்கு மேலுமொரு தெளிவான சான்றாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிஸார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸார் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US