திருகோணமலையில் உறுப்பினர்களுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை அனுஷ்டித்த கஜேந்திரகுமார்
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வுகள் நேற்று(27.11.2026) இடம்பெற்றுள்ளது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நினைவு தின அனுஷ்டிப்பு
இதன்போது மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி, மலர் மாலை அணிவித்து உயிர்நீத்த மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் பொதுமக்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவுகூர்ந்துள்ளனர்.

