கஜேந்திரகுமாரின் ஜெனிவா கடிதத்தில் மௌனித்த இன அழிப்பு விவகாரம்!

Gajendrakumar Ponnambalam M. A. Sumanthiran
By Dharu Aug 12, 2025 06:30 AM GMT
Report

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தரப்பினர் நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரசாரங்களிலும் நிகழ்த்திய உரைகளின் போது கூறிய “இன அழிப்பு” என்பது, உயிரோட்டமாகவும் முதன்மையாகவும் ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தொடர்ந்த திட்டங்களை பின்தொடர்வதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழர்கள் மீதான இன அழிப்பை தமிழ்தேசிய கட்சிகள் புறக்கணிக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

தயா கமகேவின் காணி ஏல விற்பனை! இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு

தயா கமகேவின் காணி ஏல விற்பனை! இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு

கஜேந்திரகுமார் - சுமந்திரன்

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் அ.நிக்சன், “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்திய தமிழ் தேசிய பேரவை, ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையொப்பம் இடவில்லை என்பது கட்சி அரசியல் போட்டியாக இருக்கலாம்.

கஜேந்திரகுமாரின் ஜெனிவா கடிதத்தில் மௌனித்த இன அழிப்பு விவகாரம்! | Gajendra Kumar S Geneva Letter

அது கஜேந்திரகுமார் - சுமந்திரன் என்ற இருவருக்கும் உள்ள ஆணவம், தற்பெருமை என்ற தனிப்பட்ட பிரச்சினை என்று கூட சொல்லலாம்.

ஆனால், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஆணையாளருக்கு எழுதிய தங்கள் கடிதத்தை ஏற்றுக் கொண்டார் என்றும், பிரச்சினை இல்லை என அவர் கூறியதாகவும் கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கமாகக் கூறியதன் மெய்ப்பொருள் என்ன?

சுமந்திரன் கடிதத்தை ஏற்றுக் கொண்டார் என்றால், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை கோரிக்கை கடிதத்தில் முதன்மையாக இல்லை என்பதுதானே அதன் அர்த்தம்?

இன அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, போர்க்குற்றம் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதற்கு இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தில் வைத்துக் கோரி இருந்தால், சுமந்திரன் கடிதத்தை ஏற்றிருப்பாரா?

முத்தையன்கட்டு இராணுவத்திற்கு எதிராக முடங்குமா வெள்ளிக்கிழமை! - தப்பினார் பிரிக்கேடியர் லலித் ஹேவா

முத்தையன்கட்டு இராணுவத்திற்கு எதிராக முடங்குமா வெள்ளிக்கிழமை! - தப்பினார் பிரிக்கேடியர் லலித் ஹேவா

இன அழிப்பு என்பது...

ஆகவே, கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகிய இருவரும் இலங்கை நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்த்திய உரைகளின் போது கூறிய ”இன அழிப்பு” என்பது, உயிரோட்டமாகவும் முதன்மையாகவும் கடிதத்தில் இல்லை என நான் முன்வைத்த விமர்சனம் நியாயமானது.

கஜேந்திரகுமாரின் ஜெனிவா கடிதத்தில் மௌனித்த இன அழிப்பு விவகாரம்! | Gajendra Kumar S Geneva Letter

மேலும், சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஓட்டத்தை 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார் என்று முன்வைத்த விமர்சனம் தெளிவானது. கடிதத்தில் பெயர்களை பதிவு செய்ய, தங்கள் அனுமதி பெறப்படவில்லை என சில அமைப்புகள் மறுத்திருந்தன.

ஆனால், சமூக அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தியமைக்குத் தான் பொறுப்பு அல்ல என்று கஜேந்திரகுமார் செய்தியாளர்கள் முன்னிலையில் மறுத்திருக்கிறார்.

அரசியல் கட்சிகளிடம் மாத்திரமே, தான் கையெழுத்து பெற்றதாகவும், ஏனைய அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தும் பொறுப்பு சிவில் சமூகத்துக்குரியது என்றும் கஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கற்பிதம் செய்தார்.

அப்படியானால் ஜெனீவாவுக்கு கடிதம் அனுப்பும் பணி, பொறுப்பு யாருடையது? சிவில் சமூக அமைப்புகள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட நபர்களிடம் பொறுப்பை சுமத்தவா தமிழ்த்தேசிய பேரவை உருவானது” என கூறியுள்ளார்.

மக்களை முட்டாளாக்கியே நகர்த்திவிட்டார்கள் அநுர அரசு! குற்றஞ்சாட்டும் எம்பி

மக்களை முட்டாளாக்கியே நகர்த்திவிட்டார்கள் அநுர அரசு! குற்றஞ்சாட்டும் எம்பி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US