கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்
தியாக தீபம் திலீபனின் நினைவு உறுதி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் நாட்டின் நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் தமிழர் தரப்புகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை - கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, வடக்கு நோக்கி பயணித்து கொண்டிருந்தது.
இந்த பயணத்தின் போதே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த செயற்பாட்டுக்கு எதிராக இலங்கையிலும் உலக தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam