பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் கேப்ரியல் அட்டல்
பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் புதிய பிரதமரை நியமித்துள்ளார்.
சமீப காலமாக பிரான்ஸ் மக்கள், எலிசபெத் போர்ன் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.
இளம் பிரதமர்
இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை இமானுவேல் மேக்ரான் பிரான்ஸின் பிரதமராக நியமித்துள்ளார்
34 வயதான கேப்ரியல் அட்டல் பிரான்ஸின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவரானார்.
கடந்த 1984ம் ஆண்டு பிரான்சுவா மித்திரோனால் என்பவர் தனது 37 வயதில் பிரான்ஸ் நாட்டின் பிரதமரான நிலையில், அவருடைய சாதனையை முறியடித்து 34 வயதில், பிரான்ஸ் வரலாற்றில் அட்டல் மிகவும் இளைய பிரதமராக மாறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
