இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களை தணிக்க G7 நாடுகள் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தடை விதிப்பு
இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய தீவிரவாதிகளின் சார்பாக நிதி திரட்டும் இரண்டு அமைப்புகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் "தீவிரவாத குடியேற்றக்காரர்களுக்கு" அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
பதில் தாக்குதல்
ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் இஸ்ரேல் தனது முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் என தெரிவித்த அடுத்த நாளே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் தமது நாடு மீது இஸ்ரேல் உண்மையில் தாக்குதல் நடத்தியதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இஸ்ரேல் மீது உடனடி தாக்குதல் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஈரானின் எல்லைப் பகுதியில் சிறிய வகை ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.