இலங்கை உட்பட உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் குறித்து ஜி20 அமைப்பில் விவாதம்
இலங்கை உட்பட பல நாடுகளின் பொருளாதாரங்களில் கடன் பிரச்சினைகள், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் குறித்து ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு ஒன்றில் விவாதிப்பார்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (22.02.2023) முதல் 25ஆம் திகதி வரை பெங்களூரில் இதற்கான சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றதும் இடம்பெறும் முக்கிய நிகழ்வு இதுவாகும்.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கடந்த வருடம் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் அதிகமாக யுக்ரைன் தொடர்பாகப் பேசப்படும்.

கடன் மறுசீரமைப்பு
நெருக்கடியான பொருளாதாரங்களுக்கான கடன் மறுசீரமைப்பைத் தடுப்பது மற்றும் யுக்ரைனுக்கான உதவியை அதிகரிப்பது ஆகியவை கூட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க திறைசேரியின் செயலர் ஜேனட் யெல்லனும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான கடன் நிவாரணத்தை 'விரைவாக வழங்க' சீனாவை இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய இறையாண்மைக் கடன்கொடுனரான சீனா உட்பட கடன் கொடுனர்களிடம்,
கடன்களைப் பெரிய அளவில் குறைக்குமாறு கேட்டுக்கொள்வதன் மூலம் கடனாளி நாடுகளுக்கு
உதவ ஜி20 நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்மொழிவைத் தயாரித்து வருவதாக ரொய்ட்டர்ஸ்
கடந்த வாரம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri