நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

Ministry of Education Mannar Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Independent Writer Feb 17, 2026 06:45 AM GMT
Report

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைவாக, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.

வீட்டில் இருந்த குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு- பொதுமக்கள் கவலை

வீட்டில் இருந்த குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு- பொதுமக்கள் கவலை

பரீட்சை ஆரம்பம்

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (17) காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 32 பரீட்சை மையங்களில் 3224 பரீட்சாத்திகள் க.பொ.த சாதாரண பரீட்சை இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

மேலதிக தகவல் - ஆஷிக்

மட்டக்களப்பு மாவட்டம்

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது.

பதவி விலகப்போவதில்லை..! ஐ.தே.க.வுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலடி

பதவி விலகப்போவதில்லை..! ஐ.தே.க.வுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலடி

2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சைகள் ஆரம்பமானது.

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

கடும் மழைக்கு நடுவில் பரீட்சாத்திகள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்து வரும் வேளையிலும், மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர், பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,பட்டிருப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம்,கல்குடாவ லயம், மட்டக்களப்பு மத்திய வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

மேலதிக தகவல் - குமார்

மலையக பாடசாலைகள்

2025ஆம் ஆண்டிற்கான 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் பாதுகாப்பு

இந்த முறை 2025 (2026) சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமானதுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளித்துள்ளனர்.

மேலும், பரீட்சை நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகள், புளுடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையகப்பகுதியில் மாணவர்கள் இன்று பரீட்சை எழுதுவதற்காக நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்ததுடன் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தன.

மேலதிக தகவல் - மலைவாஞ்சன்

கிளிநொச்சி

கல்வி பொது சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம் கிளிநொச்சி 2026 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சைக்கு 3728 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 17.02.2024 இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 ஆண்டு 31 பரீட்சை நிலையங்கள் 3728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும்,  பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களுக்கு சென்றுள்ளனர்.  

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் | G C E Ordinary Level Examination For The Year 2025

மேலதிக தகவல்- தேவந்தன்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US