சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு! வடக்கு மாணவர்கள் தொடர்பான விபரங்கள்(Photos)
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இதற்கமைய வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் 9Aக்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
ரமேஷ் தனு , நந்தகுமார் லிதுசன் , வருண்யா கணேசநாதன் , டனுக்க்ஷி விஸ்வநாதன் , ரஸ்மினா ஜேசுராசா , கிருஷாலினி கிருஷ்ணகுமார் , கிநோஜி சேகர் ஆகிய 7 மாணவர்களே இவ்வாறு வரலாற்று சாதனையினை படைத்துள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 7 மாணவர்கள் 9A சித்திகளையும், 3 மாணவர்கள் 8AB சித்தியினையும், 1 மாணவர் 7A2B சித்தியினையும் 2 மாணவர்கள் 6AB2C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9A சித்தியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 14 மாணவர்கள் 8A சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9A சித்தியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சாதாரணதர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 239 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 12 மாணவர்கள் 9A சித்திகளையும், 14 மாணவர்கள் 8A சித்திகளையும் 9 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளதுடன் 90 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா விபுலானந்தா கல்லூரி
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9A சித்தியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 6 மாணவர்கள் 8A சித்திகளையும், 4 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்
வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதற்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் 15 பேர் 9A சித்தி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவர்கள் 8 பேர் 9A சித்திகளையும், மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் 7 பேர் 9A சித்திகளையும், பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9 A சித்திகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் வங்காலை சென் ஆன்ஸ் பாடசாலை மாணவர்கள் 2 பேர் 9A சித்திகளையும், நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் 2 பேர் 9A சித்திகளையும், அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஒருவர் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றதால் வவுனியா மாவட்டம் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
வவுனியா தெற்கு வலயத்தில் 56 மாணவர்களும், வவுனியா வடக்கு வலயத்தில் 12 மாணவர்களும், 9A சித்திகளை பெற்று மாகாண மட்டத்தில் வவுனியா மாவட்டம் இரண்டாம் நிலையை பெற்றுள்ளது.
வட மாகாணம் முழுவதாக 551 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன.
அந்தவகையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் 99 சதவீதத்தினர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், 46 மாணவர்கள் 8ஏ சித்திகளையும், 29 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, 2021 மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்.
அவர்களில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 1
இலட்சத்து 10 ஆயிரத்து 367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர் என்பது
குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
