யாழில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன்
வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.( Jaffna) பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த ஜெயசீலன் சுமன் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
குறித்த கல்லூரியில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 28 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
சிறந்த பெறுபேறுகள்
சிறந்த பெறுபேறுகள் தொடர்பில் மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
“கல்வி என்பது நிலையான சொத்து. அதை எப்போதுமே எம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது.
ஆகவே உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் சொற்படி கேட்டு செயற்படும் போதே சிறப்பான நிலையை அடைய முடியும்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் எதிர்காலத்தில் ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப நெறி கற்கையை தெரிவு செய்து சாதிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் சாதாரண தரம் வரை புற்றளை மகா வித்தியாலயத்தில் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
