உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்:பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Weather
By Dhayani Jan 04, 2024 01:34 AM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்:பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் | G C E Al Exam 2023

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல் 

“இந்த முறை ஒரு புதிய பாடமாக கொரிய மொழி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பாடத்தைச் சேர்க்க, அட்டவணையில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் சில வலைத்தளங்கள் இந்த அட்டவணையைக் தவறாக காட்டக்கூடும். பரீட்சார்த்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிப்பத்திரத்தில் காட்டியுள்ளோம். அதனால் வேறு எங்கும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை”. 

இதேவேளை, அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்:பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் | G C E Al Exam 2023 

அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும், பரீட்சார்த்திகள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பரீட்சை மையத்திற்குச் செல்வதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்பதினை கண்டறிந்து, அருகில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தின் அவசர எண்ணை அழைத்து பரீட்சைக்கு தேவையான சூழலை தயார் செய்யவும். பரீட்சை எழுதுவதற்குத் தேவையான மனச் சூழலை உருவாக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சைக் காலங்களில், மேலதிக வகுப்புக்களை நடத்த வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜீவராணி புனிதா வலியுறுத்தியுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்ய வேண்டும்: கரு ஜயசூரிய வலியுறுத்து

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்ய வேண்டும்: கரு ஜயசூரிய வலியுறுத்து



நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US