உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்: பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்றைய தினம் (20.05.2023) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் சுமார் 32 மையங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
100 மையங்களில் ஆரம்பிக்க திட்டம்
மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள்களை பரீட்சை திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் கூறியுள்ளார்.
பொது ஆங்கிலம் பாடம் தொடர்பான விடைத்தாள்களை மதிப்பிடும் பணி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 100 மையங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29.05.2023 அன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |