பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
பல்கலைக்கலைக விரிவுரையாளர்கள் பணிப் புறக்கணிப:பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச பல்கலைக்கழக அமைப்பிலும் இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை, பணியாளர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதிய பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்புக்கு இணையாக இன்று காலை பல்கலைக்கழக ஆசிரிய சங்ங்களின் சம்மேளனத்தினால் கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"நாட்டிலுள்ள 17 அரச பல்கலைக்கழகங்களிலும் 12,000 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 5,200 பேர் மட்டுமே உள்ளனர். முன்பு ஒரு வருடத்திற்கு 25,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது வருடத்திற்கு 43,000 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு போதிய விரிவுரையாளர்கள் இல்லை. இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri