இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் மேலும் ஏழு கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323ஆக உயர்வடைந்துள்ளது.
1. வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், கொவிட் நியூமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, சுவாசப்பை பிரச்சினை மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நோய்த் தொற்று மற்றும் மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. பொலன்னறுவை பிரதேசத்தச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் கடந்த 30ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உடல் பாகங்கள் செயலிழந்தமை, கொவிட் நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. மடவல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இருதய செயலிழப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.
7. கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார். நிரிழிவு, கடுயைமான சிறுநீரக நோய், கொவிட் நியூமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.