இலங்கைக்குள் கோவிட் மரணங்கள் சற்றுமுன்னர் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்று இலங்கையில் கோவிட் தொற்றாளிகளாக 2275 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த அறுபத்து மூன்று பேர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
63 வருகையாளர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை, ஆனால் அனைவரும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்றும் நம்பப்படுகின்றது. அவர்களின் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் இன்று பெறப்பட்ட நிலையில் 63 பேரும் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பல இலங்கையர்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
