கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் தாமதம்.. ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு
புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மேலும் தாமதமாகியுள்ளது.
தற்காலிக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்மொழிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்த நியமனம் இன்னும் தாமதமாகியுள்ளது.
வாக்குகள் தேவை
மூன்று மாதங்களுக்கு பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்ற மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் ஜெயரத்னவின் பெயரை அங்கீகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திசாநாயக்க அரசியலமைப்பு பேரவையிடம் பரிந்துரைத்திருந்தார்.

எனினும் அதனை பேரவை நிராகரித்திருந்தது. முன்னதாக இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி பரிந்துரைத்திருந்த இரண்டு பெயர்களையும் பேரவை நிராகரித்திருந்தது.
அரசியலமைப்பு பேரவையின் ஒழுங்குப்படி ஒரு நியமனத்தை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் குறைந்தபட்சம் ஐந்து வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.