பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம்
ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் இன்னும் சற்று நேரத்தில் டெல்லி காண்ட் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 8ஆம் திகதி தமிழ்நாட்டின் நிலகரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். தற்போது அவர் பெங்களூரில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பிற ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்று வருகின்றன.
#WATCH | Delhi: The funeral procession of #CDSGeneralBipinRawat leaves from his residence to Brar Square crematorium in Delhi Cantonment pic.twitter.com/ysWIGSEjDk
— ANI (@ANI) December 10, 2021
-BBC-