கனடாவில் காலமான யாழ். ஊடகவியலாளரின் இறுதி சடங்குகள் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு
கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
அத்துடன், இந்த இறுதி சடங்குகள் அனுஷ்டிப்பு கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இறுதி சடங்குகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில், தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார் அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, நாளை மறுதினம்(12) புதன்கிழமை அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.

மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று, தகன கிரியைகளுக்காக பூதவுடல், கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.