உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது..! பிரதமரிடம் சஜித் கேள்வி
வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (24.03.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றுகையில், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது அரசின் பொறுப்பாகும்.

உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒரு நாள் அரச செலவினத்தைத் தேர்தலுக்குப் பயன்படுத்தினால் பணம் விரயமாகாது. குறித்த நிதியை வழங்காதது சிறப்புரிமை மீறலாகும்.
உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.
நிதியை வழங்கியவுடன் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரச அச்சகம்
கூட்டுத்தாபனம் தயாராக இருக்கும் போது, உரிய நிதியை விடுவிக்காததற்குக் காரணம்
என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri