இந்திய மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக்கொண்ட நாணயமாற்று வசதிகளுக்கான நிதித்தொகை செலுத்தப்பட்டதாக அறிவிப்பு
இந்திய மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக் கொண்ட நாணயமாற்று வசதிகளுக்கான நிதித்தொகையை இந்திய மத்திய வங்கியிடம் இருந்து எவ்வித விசேட கோரிக்கைகளுமின்றி செலுத்திவிட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய உடன்பாட்டை இலங்கை திரும்பப்பெற்றுக் கொண்டமைக்கு பதிலடியாகவே இந்திய மத்திய வங்கி இந்த வசதியைச் செலுத்தக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் எவ்வித கோரிக்கைகளும் இன்றியே இலங்கை மத்திய வங்கி குறித்த நிதியை திருப்பிச் செலுத்தியதாக மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வசதியை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கான நாணய மாற்று வசதி எதிர்வரும் 2022 நவம்பர் வரைக்கும் கிடைக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்ச்சியாகக் குறைந்து வருவதாகவும், ரூபாவின் பெறுமதி பாரிய அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே 2022ஆம் ஆண்டில் கடனை மீளச்செலுத்துவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
