மட்டக்களப்பில் நடைபெற்ற ஆடிமாத பௌர்ணமி கலை விழா!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து நடத்திய ஆடிமாத பௌர்ணமி கலை விழா நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு,கல்லடி கடற்கரையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் கலந்துகொண்டார்.
கலை விழா
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இலைமறை காயாக உள்ள கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான மேடையினை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கலைஞர்கள் பலர் தமது திறமைகளை மேடையேற்றியதையும் காணமுடிந்தது.
இந்த நிகழ்வில் முதல்வராக பதவியேற்றுள்ள சிவம்பாக்கியநாதனை மாநகரசபையின் ஆணையாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.








ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
