இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டவர்களின் முழு விபரம்
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அது தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு 10 (மருதானை/மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 61 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த புதன்கிழமை (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, உக்கிர நீரிழிவு மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 15 (மட்டக்குளி/மோதரை) பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, ஈரல் மற்றும் சிறுநீரக தொற்று, உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொகுணுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 58 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்புப்படை மருத்துவ பீட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த, 79 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நியூமோனியா, உக்கிர நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 15 (மட்டக்குளி/மோதரை) பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மடுவல பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான பெண் ஒருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா உடன் இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான பெண் ஒருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12 (வாழைத்தோட்டம்/புதுக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, குருதி விஷமடைவு, சிறுநீரக செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.







யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ Cineulagam
