நாட்டில் எரிபொருளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
நாட்டில் எரிபொருளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பண்டிகை காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைக்கிறது. 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம். அத்துடன் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்காலத்தில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும்.
வீடுகளிலும் வேறு இடங்களிலும் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்படும் டீசல், பெற்றோல் போன்ற எரிபொருட்களால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் தெரியவருகிறது.
இது ஒரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan