மின்சார சபைக்கு இனி எரிபொருள் வழங்க முடியாது! - உதய கம்மன்பில
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் தேவையான டீசலை வழங்குவதற்கு டொலர்கள் மட்டுமே தேவை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் லொக்குகேவிடம் பேசுவதற்கு எமக்கு எதுவும் இல்லை, மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைச்சருடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை ரூபாய் பரிவர்த்தனை மூலம் வழங்கி வருவதாக நாங்கள் குறிப்பிட்டோம்.
ஆனால் எரிபொருளை இறக்குமதி செய்ய டொலர்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இதுவரை 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், எனவே நாளை வரை எவ்விதமான மின்வெட்டுமின்றி மின்சார விநியோகம் இடம்பெறும் என்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam