வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் - நிமல் பியதிஸ்ஸ எம்.பி யோசனை
வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை முன்பதிவு செய்வதன் மூலம் குறைந்தது முன்னூறு அல்லது நானூறு டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் பலரிடம் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு நாணயம் உள்ளது.
சுற்றுலாத் துறையில் ஒரு முன்னாள் வழிகாட்டியிடம் சிறிய அளவு வெளிநாட்டு நாணயம் இருக்க கூடும். இந்த மறைமுகமான வெளிநாட்டு நாணயத்தை வெளியே கொண்டு வரவே நான் இதனை முன்மொழிகிறேன்.

மறைந்திருக்கும் டொலர்களை வெளிக்கொணர முடியும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெட்ரோல் நிலையம் ஒதுக்கப்பட்டு வெளிநாட்டு பணத்தில் மட்டுமே எரிபொருளை வழங்க வேண்டும்.
அப்போது நாடு முழுவதும் குறைந்தது முந்நூறு அல்லது நானூறு டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையில் எண்ணிலடங்கா வெளிநாட்டு நாணயங்களை இழக்க முடியாது.
தான் கூறுவதை செயற்படுத்தினால் எரிபொருள் தேவையுடன் மறைந்திருக்கும் டொலர்களை வெளிக்கொணர முடியும்.
ஆகையினால் எனது பரிந்துரையைப் பற்றி சிந்தியுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam