எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சி! விசாரணையை ஆரம்பித்துள்ள சிஐடி
நாட்டின் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறும் சில நபர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுபாடு
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களை பதற்ற நிலையில் வைத்திருக்க முயற்சிகளை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.
இந்நிலையில் எரிபொருளுக்கு தட்டுபாடு நிலவுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதனால் மக்கள் மீண்டும் வரிசையுகம் ஆரம்பிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இந்தநிலையிலே காவல்துறையினர் இவ்வாறான தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri