இலங்கையில் செப்டெம்பர் முதல் நிறுத்தப்படுகிறதா எரிபொருள் மானியங்கள்..! சபையில் அம்பலமான தகவல்
செப்டெம்பர் மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் மானியங்கள் நிறுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (22.09.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வழங்கப்பட்ட பதில்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கு அத்தகைய அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்பதைப் பொறுப்புடன் வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கம் அவ்வாறான அறிவிப்பை விடுத்திருந்தால் அதை நிரூபிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காருக்கு எரிசக்தி அமைச்சர் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.