எரிபொருள் கையிருப்பு முடிந்தது! - இலங்கை மின்சார சபை அறிவிப்பு
மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் காலாவதியாகும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம் மாத்திரமே எரிபொருள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று டீசல் மற்றும் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் எனவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை, எதிர்வரும் 27ம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியம் கிடையாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை, மீண்டும் 27ம் திகதி பரிசீலிக்க போவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாயினும், எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கைவசம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
