கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை
கடன் அடிப்படையில் எரிபொருட்களை கொள்வனவு செய்வது குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களை திரட்டிக் கொள்வதில் நிலவி வரும் நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 500 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருள் கொள்வனவு செய்வதாகவும் இது மொத்த ஏற்றுமதி வருமானத்தின் 50 வீதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் இவ்வாறு பல நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




