எரிபொருள் தட்டுப்பாடு: பாதையை மூடி எதிர்ப்புக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதிகள்
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாதையொன்றை மூடி முச்சக்கரவண்டி சாரதிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

வீதியை மறித்து போராட்டம்
இந்நிலையில் கொழும்பு, நாரஹேன்பிட்ட பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளில் ஒன்றிணைந்து இன்று காலை தொடக்கம் நாவல-நாரஹேன்பிட்ட பிரதான வீதியை மறித்து முச்சக்கர வண்டிகளை நிறுத்தி பாதையை மறித்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் காரணமாகக் குறித்த பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்ந்தும் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri