எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் துண்டிப்பு, வாழ்க்கைச்சுமை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் (VIDEO)
எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டிப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன், கினிகத்தேனை நகரில் ஜே.வி.பியினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் ஏழரை மணிநேர மின்சார துண்டிப்பால் சிறு முயற்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்கிடையில் எரிபொருளும் இல்லை. அதனால் சாரதிகள் உட்பட பல துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நாட்டில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில்,
இப்படியான பிரச்சினைகளால் மக்கள் மீண்டெழ முடியாதுள்ளது எனவும்
போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


















ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
