மத்திய கிழக்கில் பதற்றம்: எரிபொருள் பற்றாக்குறையா..! இலங்கை மக்களுக்கு கடுமையான அவசர அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இந்நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்குத் தடையாக அமையாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாராவது கலன்களில் எரிபொருளைப் பெற்றுச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மக்களுக்கு கடுமையான அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார்.
இன்று (01.03.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை
மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது. குறித்த எரிபொருட்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கிடைக்கவுள்ளன.
இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இந்நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்குத் தடையாக அமையாது. நாங்கள் இதனைப் பொறுப்புடன் கூறுகிறோம். எனவே, எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

இன்று (01) நாங்கள் எரிபொருள் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருக்கவில்லை. எனினும், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதால், விநியோகப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களையும் நாம் பணிக்கு அழைத்துள்ளோம்.
கலன்களில் எரிபொருள் கிடைக்காது
தற்போது எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை (02) பௌர்ணமி தினமாக இருந்தாலும், எரிபொருள் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் கலன்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
யாராவது கலன்களில் எரிபொருளைப் பெற்றுச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam