எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் பொதுமக்களுக்கு வெளியிட்ட தகவல்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்தே அவர் மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பெட்ரோலிய பொருள் விநியோக ஒன்றியம் (Petroleum Dealers’ Association) அறிவித்துள்ளது.
அதில் நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விலை திருத்தம் காரணமாக அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிபொருள் கொள்வனவிற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும்
இதன் காரணமாகவே எரிபொருளுக்குத் தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருட்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறெனினும், நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு கிடையாது எனவும் இந்த தட்டுப்பாடு செயற்கையானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (01.06.2023) மாலை மற்றும் நாளை (02.05.2023) காலை அளவில் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Request the public not to panic on fuel shortages as CPC & LIOC has adequate stocks. Shortage are due to non placement of orders by Fuel Station owners anticipating a fuel price reduction. Dealers has been required to maintain a minimum stock of 50%. I have asked CPC to review &…
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 1, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
