வவுனியாவில் எரிபொருள் தட்டுப்பாடு!
வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சில இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டதுடன், எதிர் கட்சியினரும் எதிர்வு கூறியிருந்தனர்.
இந்நிலையிலேயே வவுனியாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாகவும், எனினும் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் அக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumit Wijesinghe) அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்து.










சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
