எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
முச்சக்கரவண்டிகளுக்கு எரிப்பொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்திருந்தார்.
முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்தல்
அதனைத் தொடர்ந்து இன்று முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கரைவண்டிகளுக்கும் எரிப்பொருள் ஒதுக்கீடு அதிகரிக்க முடியாது எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது உள்ளது போன்று, பதிவு இல்லாமல் ஒரே நேரத்தில் எரிபொருள் வழங்கினால், எல்லோருக்கும் வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரட்டிப்பாக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு: வெளியானது புதிய அறிவிப்பு |
பயணக் கட்டணம் குறைப்பு
இந்நிலையில் முச்சக்கரவண்டியின் பயணக் கட்டணம், முதலாவது கிலோமீட்டருக்கு 20 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்தே கட்டணக் குறைப்பு தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முச்சக்கரவண்டி பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! கட்டணக் குறைப்பு குறித்து புதிய அறிவிப்பு |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
