இலங்கையை விட அமெரிக்கா, பிரித்தானியாவில் எரிபொருள் விலை அதிகம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் சுமார் 45 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்து எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை எதிர்கால சந்ததியின் பயன்பெறக் கூடிய வகையில் தற்போது முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் தற்போது சில நாடுகளை தவிர ஏனைய அனைத்து நாடுகளிலும் இலங்கையை விட எரிபொருள் விலைகள் அதிகம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாத்திரமின்றி, பங்களாதேஷ் , பூட்டான் போன்ற நாடுகளிலும் இலங்கையை விட எரிபொருள் விலைகள் அதிகம் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையை மேற்கோள்காட்டி அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam