பொய் உரைக்கும் அரசுக்கு சஜித் மட்டுமே மாற்று வழி! சமிந்த விஜேசிறி எம்.பி. சுட்டிக்காட்டு

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka Economic Crisis Chaminda Wijesiri
By Rakesh Jun 02, 2026 10:17 AM GMT
Report

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்று உறுதியளித்திருந்தபோதிலும், புனித வெசாக் பௌர்ணமி தினத்தன்று மக்கள் வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நள்ளிரவில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் இத்தகைய பொய் உரைக்கும் அரசியலை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றும், எப்போதும் உண்மையை மட்டும் பேசி நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்கக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அநுர அரசுக்கும் பசிலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் மர்மம் : அம்பலப்படுத்தும் ராஜபக்சர்கள்

அநுர அரசுக்கும் பசிலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் மர்மம் : அம்பலப்படுத்தும் ராஜபக்சர்கள்

திட்டமிட்டு ஏமாற்றப்படும் மக்கள் 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

"தரம் குறைந்த நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் மிகப் பெரிய ஊழலைச் செய்துள்ளது. இந்த முறைகேட்டைத் தணிக்கைத் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மறைக்கவே, நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் திடீர் தொழில்நுட்பக் கோளாறு என்ற பெயரில் நாளொன்றுக்கு 3 முதல் 4 மணித்தியாலங்கள் மறைமுக மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது வரிக்குறைப்பு மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றிப் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, இன்று ஆட்சியைப் பிடித்த பிறகு மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது.

பொய் உரைக்கும் அரசுக்கு சஜித் மட்டுமே மாற்று வழி! சமிந்த விஜேசிறி எம்.பி. சுட்டிக்காட்டு | Fuel Price Issues In Sri Lanka   

திறைசேரி நிரம்பியுள்ளதாக ஜனாதிபதி கூறுவது உண்மை எனின், ஏன் மக்களுக்கு மின்சாரம் மற்றும் எரிபொருள்களுக்கான நிவாரணங்களை வழங்கக் கூடாது? இவர்களின் செயல் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து சர்வதேசத் திருடர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதோ என்ற பலத்த சந்தேகத்தையே எழுப்பியுள்ளது.

குறிப்பாக, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்காத நிலையிலும், இலங்கையில் மட்டும் இந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் இத்தகைய பொய் உரைக்கும் அரசியலையும் ஊடக அடக்குமுறைகளையும் மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். தற்போது அரசுக்குள் இருக்கும் சிலரே இவர்களின் ஏமாற்று மற்றும் பொய் வேலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அதனாலேயே கட்சி மாறுபவர்களுக்கும், தமக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கும் எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து, அவர்களின் வாயை மூட அரசு முயற்சிக்கின்றது. கடந்த காலங்களில் ஊடகங்களை ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

பொய் உரைக்கும் அரசுக்கு சஜித் மட்டுமே மாற்று வழி! சமிந்த விஜேசிறி எம்.பி. சுட்டிக்காட்டு | Fuel Price Issues In Sri Lanka  

அரசின் மீதான மக்கள் ஆதரவு முற்றாகச் சரிந்துவிட்டதை உணர்ந்துகொண்டதன் காரணமாகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சி அதனைத் தள்ளிப்போட்டு வருகின்றது.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது எமது தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்குவதற்காகப் பாடசாலைகளுக்கு 'ஸ்மார்ட் போர்டுகளை' வழங்கியபோது இவர்களே கிண்டலடித்தார்கள்.

ஆனால் இன்று மேடைகளில் பொய் உரைப்பதைத் தவிர, இந்த அரசுக்கு நாட்டை வழிநடத்த எவ்வித பொருளாதார அறிவோ அல்லது நிபுணத்துவமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளுடன் கைகோர்க்காமல் எப்போதும் உண்மையை மட்டும் பேசி, நாட்டை இந்த ஆழமான பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்கக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே என குறிப்பிட்டுள்ளார்.

கபில சந்திரசேனவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கபில சந்திரசேனவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சதிகளை முறியடித்த தமிழகம் : ஈழத்தமிழர்களுக்காக நின்ற 21 தமிழர்கள்

சதிகளை முறியடித்த தமிழகம் : ஈழத்தமிழர்களுக்காக நின்ற 21 தமிழர்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US