உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான யுத்தத்தின் போது எரிபொருள் விலைகள் உச்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது நிலவும் அமைதியான சூழலின் காரணமாக இவ்வாறு விலைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
விலை நிலவரம்
ஆசியச் சந்தைக்குப் பெரும்பாலான எரிபொருளை வழங்கும் பிரென்ட் கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை, சுமார் 70.80 அமெரிக்க டொலராகக் குறிப்பிடப்பட்டது.

ஈரான் போர் தொடங்கிய பெப்ரவரி 28ஆம் திகதியளவில், ஒரு பரல் பிரெண்ட் எரிபொருளின் விலை 70 அமெரிக்க டொலருக்கு அருகில் இருந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவில் ஒரு பரல் WTI கச்சா எண்ணெயின் விலை 67.87 அமெரிக்க 67.87ஆக பதிவாகியுள்ளது.
போருக்கு முன்பு, அது 68 அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam