எரிபொருள் விலைகள் தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகள் குறைக்கப்படாமைக்கான காரணத்தை மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பதிவிட்டுள்ள X பக்க பதிவில் அவர் மேலும், சுத்திகரிப்பு விலையானது ஒட்டோ டீசல், 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சுத்திகரிப்பு தயாரிப்பு
சுத்திகரிப்பு தயாரிப்புகளுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வரி ஜனவரி 1 முதல் பொருந்தும். சுத்திகரிப்பு ஆதாயங்கள் மற்றும் இழப்புகள் மேற்கண்ட தயாரிப்புகளில் கணக்கிடப்படுகின்றன.
சுத்திகரிப்பு நிலையம் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலை உற்பத்தி செய்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
CPC fuel cost break down after the price revision on 31st March 2024 ??
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 1, 2024
1. Refinery cost has an impact on Auto Diesel, 92 petrol and Kerosine. VAT is applicable for Refinery products as well from the 1st of January. Refinery gains and losses are calculated on the above products.… pic.twitter.com/KUEfoDzj2P