எரிபொருள் விலையில் திடீர் மாற்றம் : நள்ளிரவு முதல் நடைமுறை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலையில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தம்
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 456 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 363 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri