இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியானது புதிய விலை விபரம்
புதிய இணைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.
மேலும், இதே அளவான விலைத் திருத்தங்களை செய்வதாக லங்கா ஐஓசியும் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
எரிபொருள் விலை இன்று (31.05.2023) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறையும் எரிபொருள் விலையை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, தற்போது QR அமைப்பின் ஊடாக வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கான 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 22 லீட்டராகவும், சாதாரண முச்சக்கரவண்டிக்கு 08 லீட்டராக இருந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
30 லீட்டராக இருந்த காருக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீ்ட்டராகவும், வான் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் ஒதுக்கீடு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், பேருந்துகளுக்கு 60 லீட்டராக இருந்த எரிபொருள் ஒதுக்கீடும் இன்று நள்ளிரவு முதல் 125 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 75 லீட்டராக இருந்த லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 125 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |