எரிபொருளின் விலையை உயர்த்தாவிட்டால்...! விநியோகம் கட்டுப்படுத்தப்படும் - கடுமையான எச்சரிக்கை
எரிபொருள் விலை உயர்த்தப்படாவிட்டால் விநியோகத்தை வரையறுக்க நேரிடும் என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்த்தப்படாவிட்டால் மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பேருந்துகள் மற்றும் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது எரிபொருள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் நாள் ஒன்றுக்கு 365 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை கொள்வனவு செய்யத் தேவையான டொலர்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருட்களுக்கான விலையை உயர்த்தாவிட்டால் இந்த மாதம் ஏற்படக்கூடிய நஷ்டம் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெற்கு பத்திரிகையொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri