மக்கள் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக QR முறையை கொண்டு வந்தோம்...!
நாங்கள் வெளிநாடுகளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதாலேயே நாங்கள் வரிசையில் நிற்கவேண்டிய தேவையுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
எனவே நாங்கள் எங்களுடைய மக்கள் சித்திரை புத்தாண்டை நல்ல முறையிலே கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த QR முறையினை கொண்டு வந்திருக்கிறோம்.
நற்பிரஜைகள்
ஜனாதிபதி இந்த நாட்டை எப்படி வழக்க வேண்டும், இந்த நாடு மற்ற நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவின்றி அல்லும் பகலும் உழைத்து கொண்டிருக்கின்றார்.

அதற்கு செயலூக்கம் தருகின்றன வகையிலே எமது பிரதம மந்திரி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரஜா சக்தி தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து நாங்கள் இந்த நாட்டை வளர்க்க விரும்புகின்றோம். இப்போது நாங்கள் ஒரு முடிவு எடுத்திருக்கின்றோம்.
இந்த கிராமம் எதிர்காலத்திலே ஒரு மாதிரியான நற்பிரஜைகள் இருக்கின்ற ஒரு கிராமமாக உருவாக்க நாங்கள் இப்போது காத்திருக்கின்றோம்.
30 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதாரத்தை இழந்தோம். பல மக்கள் காணாமல் போனார்கள். கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்கள்.
இட பெயர்வு
இன்றும் பலர் கை கால் இல்லாமல் வாழ்கின்றார்கள். வீடு இல்லாமல், தனது பிள்ளைகள் வர மாட்டர்களா என ஏங்குகின்ற மக்களுக்கு 30 ஆண்டு களுக்கு மேலாக தங்களுக்கு ஒரு அமைதி வேண்டும், உரிமை வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் போராடினார்கள்.
அந்த காலத்தில் பல இட பெயர்வுகளை வந்தித்தோம். பொருளாதாரத்தை அழித்தோம்.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இந்த நாட்டை நாங்கள் முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே இந்த நாட்டில் வாழ்கின்ற இந்த மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க பட வேண்டும். நீண்ட காலமாக போராடிய மக்களுடைய தாகம் தீர்க்க பட வேண்டும். அபிவிருத்தி இல்லாமல் போன இந்த நாட்டின் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றார்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam