எரிபொருள் விலையேற்றம்! இலாபம் மற்றும் நட்டத்தை பட்டியலிட்டார் அமைச்சர்
எரிபொருள் தொடர்பான இலாப நட்ட விபரங்களின் பட்டியலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இது குறித்து அறிவித்துள்ளார்.
இன்று காலை முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு இலாப நட்ட விபரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
Fuel Price Revision Break Down pic.twitter.com/D2r4dpMHgL
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 26, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு

இந்த நிலையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம் 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும். 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலைகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.

ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri