எரிபொருள் விலையேற்றம்: இடை நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் (Photos)
கிளிநொச்சி- முட்கொம்பன் கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகள் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்கள், மாணவர்கள் எனப்பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் விசனம்
கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன், செக்காலை மற்றும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கண்ணகை புரம் ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் கடந்த காலங்களில் இல்லாத நிலையில் மக்களின் தொடர் கோரிக்கை காரணமாக குறிப்பிட்ட இரு பேருந்து சேவைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறித்த போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதனால் தாங்கள் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
போதிய அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் தேவைகளை நாடி வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையிலும் இவ்வாறு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமையால் குறித்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| மண்ணெண்ணெய் இன்மையால் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை (Photos) |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 19 மணி நேரம் முன்
விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா? Cineulagam
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
