மண்ணெண்ணெய் இன்மையால் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை (Video)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடலில் மீன்பிடிக்கச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது,இவ்விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொருவர் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் நடந்தது என்ன..!
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக படகில் தொழிலுக்குச் செல்ல வேண்டிய கடற்தொழிலாளர்கள் சாதாரண தோணிகளில் மீன்படிக்கச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தொழிலுக்காக செல்ல வேண்டிய குறித்த கடற்தொழிலாளர்கள் நேற்று (27) மீன்பிடிப்பதற்கான மீன்பிடி படகிற்கு மண்ணெண்ணெய் இன்மையால் சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது சுழல் காற்று காரணமாக தோணி நடுக்கடலில் மூழ்கிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த கடற்தொழிலாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| வவுனியாவில் எரிவாயு பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்றவர் துரத்தியடிப்பு |







யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
