மட்டுப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் வாகனங்களுக்கான எரிபொருள்
பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமொன்று பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பொலிஸ் திணைக்களத்தின் பிரதானிகள் மற்றும் பிராந்திய கணக்காளர்களுக்கு சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் 15 வீதத்தினால் குறைக்கப்பட வேண்டுமென்று பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணப்பெறுமதி வீழ்ச்சி காரணமாக தற்போதைக்கு பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் 20 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம்
பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக நிதிவளம் இல்லாத நிலையிலும், நிர்வாக நடவடிக்கைகளுக்கான தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் காரணமாகவும் பொலிஸ் அதிகாரிகளுக்கான எரிபொருள் விநியோகம் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



