இலங்கையில் தொடரும் நெருக்கடி - ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி
மின்சாரம் வழங்கல், பெட்ரோலியப் மற்றும் எரிபொருள் விநியோகம், வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டார்.
அதன்படி, மின்சாரம் வழங்கல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது பராமரிப்பு, வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri