மலையகத்தில் அனுமதிச்சீட்டு முறைமையில் எரிபொருள் விநியோகம் (Photos)
நாட்டில் அனுமதிச்சீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல்
எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் அனுமதிச்சீட்டு முறையில் எரிபொருள் விநியோகம் நடைபெறவுள்ளது.
இராணுவ படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு தழுவிய இன்று (27) காலை முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.

ஹட்டனில் வழங்கி வைப்பு
ஹட்டன் நகரிலுள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களுக்கு எரிபொருளை பெற்றுகொள்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஹட்டன் பொலிஸாரால் குறிப்பு புத்தகமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பன அதன்மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு வாகனம் ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை பெறுவதை தடுத்தல், வரிசைகளை குறைத்தல் உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

May you like this video
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri